அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: திமுக மனு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். 

News image
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :2 ஜனவரி 2020, 7:32 am

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். 

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கேரளப் பேரவையில் நேற்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றதோடு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளிலும் இதேபோல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசனிடம் இன்று மனு அளித்துள்ளனர். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கவுள்ளதையடுத்து, இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமைச்  சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.