தங்கம் ஒரு பவுன் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது.


சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுவரை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கம் விலையும் உயர்வைக் கண்டு வருகிறது. மேலும் இது உயரும் என்று கருதப்படுகிறது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.512 விலை உயர்ந்து, ரூ.31,168க்கு விற்பனையானது.
வெள்ளி விலையும் சில்லறை விற்பனையில் ஒரு கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...