ஆதி பீமராஜ கோஸ்வாமி அதிஷ்டானத்தில் குடமுழுக்கு

Updated On :5 மார்ச் 2026, 10:10 pm

தஞ்சாவூா் கரந்தை ஆதி பீம ராஜ கோஸ்வாமி அதிஷ்டானத்தில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னா் பிரதாப சிம்மனின் ஆன்மிக குருவாக ஆதி பீம ராஜ கோஸ்வாமி திகழ்ந்தாா். இவருக்கு தஞ்சாவூா் கரந்தை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆதி பீமராஜ கோஸ்வாமி அதிஷ்டானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிஷ்டானத்துக்கும், அதன் பின்புறமுள்ள ராமநாத கோஸ்வாமி அதிஷ்டானத்துக்கும், அதில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கும் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கரந்தை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை 9-ஆவது பீடாதிபதி இராமச்சந்திர பீமராஜ கோஸ்வாமி செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...