11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

திருச்செந்தூரில் தேசிய கொடி ஏற்றினார் கனிமொழி எம்.பி.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்பு மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

News image
Updated On :26 ஜனவரி 2020, 10:02 am

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்பு மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் மருத்துவர் செ.வெற்றிவேல், எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டி.பி.பாலசிங், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மு.ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றியச் செயலர்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமார், ரவி, நகரச் செயலர்கள் வாள் சுடலை, ஜாண்பாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளர்கள் ராஜபாண்டி, சுப்பிரமணியன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஸ்ரீதர் ரொட்ரிகோ, இசக்கிமுத்து, சுதாகர், பொன்முருகேசன், லதா கலைச்செல்வன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் கோமதிநாயகம், ராஜ்மோகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.