சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரியில் மாபெரும் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:38 pm

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  குடியுரிமைச் சட்டத்துக்கு  எதிராக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.