தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெறும்: இந்து முன்னணி அறிவிப்பு
தமிழகத்தில் கரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவானது அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையாக நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.







