கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளிகள் 1,500 பேருக்கு கரோனா நிதியுதவி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் 1,500 மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதி உதவியை வட்டாட்சியர் தெய்வநாயகி புதன்கிழமை வழங்கினார். 
கூத்தாநல்லூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிதி உதவி வழங்கப்பட்டது
கூத்தாநல்லூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிதி உதவி வழங்கப்பட்டது
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் 1,500 மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதி உதவியை வட்டாட்சியர் தெய்வநாயகி புதன்கிழமை வழங்கினார். 

சீனாவின் கரோனா தொற்று நோயால் அண்டமே அவதிக்குள்ளாகியுள்ளது. கோடீஸ்வரன், படித்தவர், படிக்காதவர், ஏழை என அனைவருமே ஒவ்வொரு விதத்திலும் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். 

கரோனா தொற்று நோயால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அரசு மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பல விதத்திலும் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தொற்று நிதி உதவி வழங்க தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உத்தரவுப்படி, கூத்தாநல்லூர் வட்டம் சித்தாம்பூரில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு, மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் முன்னிலையில், கரோனா நிதியுதவி ரூ.1000-த்தை வட்டாட்சியர் தெய்வநாயகி வழங்கினார். உடன், வருவாய் ஆய்வாளர் இளமாறன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதுகுறித்து, வட்டாட்சியர் தெய்வநாயகி கூறியது..

கூத்தாநல்லூர் வட்டத்தில், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பூதமங்கலம், கமலாபுரம், சேகரை, அத்திக்கடை, வேளுக்குடி உள்ளிட்ட கூத்தாநல்லூர் வட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வழங்கும் கரோனா நிதியுதவி ரூ ஆயிரத்தை, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் தேடிச் சென்று வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com