நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கம்பம்: உலக சாதனை படைத்த 400 பேர் இணைந்து உருவாக்கிய வரைபடம்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மருத்துவ, பொறியியல் பட்டதாரி மாணவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றுபவர்களை சிறப்பிக்க  400 பேர் மூலம் படம் வரைந்து, கலாம் உலக சாதனை படைத்துள்ளனர்.

News image

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றுபவர்களுக்காக வரைந்த, கலாம் உலக சாதனை சான்றிதழ் பெற்ற படம்.

Updated On :1 ஜூலை 2020, 9:46 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மருத்துவ, பொறியியல் பட்டதாரி மாணவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றுபவர்களை சிறப்பிக்க  400 பேர் மூலம் படம் வரைந்து, கலாம் உலக சாதனை படைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கா.நிக்சய், கம்பத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர்கள் கே.ரூபேஷ், அப்துல் வாஜீத், ஜெயகாந்தன். இவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றி வருகின்ற மருத்துவர், செவிலியர், ஊடகவியலாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகியோர்களை கெளரவிக்கும் வகையில் இணையதளம்  மூலம் நாடு முழுவதும் 400 பேர்களை தேர்வு செய்து, குறிப்பு மட்டுமே கொடுத்து படம் வரையக் கூறினர்.

அதன்படி 400 பேரும் சார்ட் பேப்பரில் கையால் கொடுத்த குறிப்புகளின்படி படம் வரைந்து, இணையத்தில் பதிவேற்றினர். மே 23-ல் தொடங்கிய இந்த படம் வரைதல் நிகழ்வு ஜீன் 20-ல் முடிந்தது. வந்த 400 படங்களையும் ஒன்றிணைத்து, முழு படமாக மாற்றினர். அதில் கரோனா காலத்தில் பணியாற்றிய சூப்பர் ஹீரோக்களுக்கு மரியாதை என்று தெரிவித்து, அவர்களின் படம் வரையப்பட்டிருந்தது.

400 பேரும், என்ன படம் வரைகிறோம் என்று தெரியாமலேயே, படம் வரைந்து, அவற்றை இணைத்து, வித்தியாசமான வண்ணங்களில்,கலாம் உலக சாதனைப் புத்தகத்திற்கு அனுப்பினர். அந்நிறுவனத்தினர் இவர்களின் சாதனைகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

இதுபற்றி மாணவர் ஜெயகாந்தன் கூறியது: கரோனா காலத்தில், நமக்காக பணியாற்றுபவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும்  விதமாக, ஓய்வு காலத்தில் இருக்கும் மாணவர்கள், முதல் அனைவரையும் ஒன்றிணைத்து, படம் வரைவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுதியுள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர் பள்ளியில் இருந்தும் கூட இச்சாதனையில் பங்கேற்றுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.