என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
என்எல்சி தீ விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி ஒருவர் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.


நெய்வேலி: என்எல்சி தீ விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி ஒருவர் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிலையத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தில் 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் துணை தலைமை பொறியாளர் க.சிவகுமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டம், தொப்புளிகுப்பம் கிராமம் கோபால் மகன் செல்வராஜ்(ஒப்பந்தத்தொழிலாளி), இளநிலை பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஃபோர்மேன் எம்.வைத்தியநாதன் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...