ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணையத்தளங்கள் அவர்களுக்குக் கவனம் சிதறல் ஏற்படுகிறது. எனவே மாணவ மாணவிகள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதேபோல, ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து அரசு கண் மருத்துவமனை தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரபாகரன் மற்றும் ஜே. ரவீந்திரன் ஆகியோர், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி அரசு கண் மருத்துவமனை தலைவர் இதுவரை எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர். சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து விசாரணையை வரும் ஜூலை 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில், அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...