உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது கரோனா தொற்று. இதன் பரவலைத் தடுக்க பொது மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதஇறுதி வாரம் தொடங்கி இம்மாத இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடும் பல்வேறு இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன.