காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜான்ரோஸ் (23), இவர் கடந்த மாதம் 26ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(25), என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்துர் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போந்துர் செல்வதாக தனது வீட்டில் கூறி சென்ற ஜான்ரோஸ் வீடு திருப்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஜான்ரோஸ் காணவில்லை எனப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து ஜான்ரோசை தேடி வந்தனர்.