புதுக்கோட்டை நகரில் மாவட்ட மனநலத் திட்டத்தின் ஒருங்கிணைப்பில் வருவாய்த் துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறையினர் இணைந்து நகரில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மனநலன் பாதித்தோரை மீட்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகச் சாலை, டிவிஎஸ் முக்கம், மருப்பிணி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்த தலா இரு ஆண், பெண் என மொத்தம் 4 பேர் மீட்கப்பட்டனர்.
தொடக்கத்தில் இவர்கள் குளிக்க வைக்கப்பட்டு ஆடைகள் மாற்றப்பட்டனர். தொடர்ந்து உணவு வழங்க மனநல சிகிச்சையும் தொடங்கப்பட்டது. வருவாய்க் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் இந்த மீட்புப் பணியில் பங்கேற்றனர்.
இத்திட்டம் குறித்து மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம் கூறியது:
மாவட்ட பழைய அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் இவர்களுக்காக தனி இடம், கவனிப்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக மாவட்டம் முழுவதுமுள்ள மனநலம் பாதித்தோர் மீட்கப்படுவர். சிகிச்சைக்குப் பிறகு குடும்ப உறவுகள் கண்டறியப்பட்டு அவர்களுடன் ஒப்படைக்கப்படுவர் என்றார் கார்த்திக் தெய்வநாயகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


