காவலருக்கு கரோனா: பஞ்சப்பள்ளி காவல் நிலையம் மூடல்
காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பஞ்சப்பள்ளி காவல் நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.


காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பஞ்சப்பள்ளி காவல் நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தருமபுரி ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய காவலர் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளது. இதையொட்டி, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் வியாழக்கிழமை கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டார். இதில், இவருக்கு தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, சிகிச்சைகாக காவலர், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல, காவலருக்கு தொற்று ஏற்பட்டதால், பஞ்சப்பள்ளி காவல் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், நோய்த் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக காவல் நிலையம் மூடப்பட்டது.
காவல் நிலையத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட காவலருடன் பணியாற்றிய சக காவலர்கள் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும், காவல் நிலையம் அருகாமையிலுள்ள ஒரு இடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...