எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனாவால் மூடப்பட்ட நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் மீண்டும் செயல்பட தொடங்கியது

கரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை  மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

News image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையில் பணிக்கு வந்திருந்த பெண் ஊழியர்கள்.
Updated On :20 ஜூலை 2020, 9:45 am

DIN

கரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை  மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டம் முழுவதும் 316 ர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் குணமடைந்தவர்கள் தவிர்த்து 151 பேர் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களும் அடங்குவர். அவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகம் முழுமையாக மூடப்பட்டது. மூன்று நாட்களாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதற்கிடையே திங்கள்கிழமை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், தபால் பிரிவில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதுவரை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை முதல் அனைத்து துறை அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளன. அதேவேளையில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.       

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களும் ஒருவித அச்சத்துடனேயே ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.