சேலம், கோவை உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, தர்மபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தர்மபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியிருக்கும்.
நாளை, வடகடலோர தமிழகம், புதுவை, காரைக்கால், சென்னை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தர்மபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சித்தாருவில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...