தமிழகத்தில் கரோனா குறையும் என முதல்வர் கூறி இன்றுடன் 10 நாள்கள் ஆகிவிட்டன: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் கரோனா குறையும் என முதல்வர் கூறி இன்றுடன் 10 நாள்கள் ஆகிவிட்டன என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கரோனா குறையும் என முதல்வர் கூறி இன்றுடன் 10 நாள்கள் ஆகிவிட்டன என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 10 நாள்களில் கரோனா குறைய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனாவை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதியில் 600க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் கரோனா தொற்று குறைந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில், பத்தேநாளில் கரோனா குறையும் என தமிழக முதல்வர் கிளப்பிவிட்டு இன்றோடு 10 நாட்களாகிவிட்டன. ஏற்கனவே, 3 நாட்களில் கரோனா ஜீரோ வரும் என்றார். பாதிப்பு எண்ணிக்கையில் ஜீரோக்கள் கூடியதே மிச்சம். கொரோனாவுக்கு ஒன்றிரண்டு தெரியாததற்கு நான் என்ன செய்யமுடியும் என்று ஒருநாள் சொன்னாலும் சொல்வார் என்றார்.
தமிழகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 6,785 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,99,739-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் அதி தீவிரமாகி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிலை தொடா்ந்தால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் சென்னைக்கு நிகரான பாதிப்பை எதிா்கொள்ளக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...