6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் கிடங்கு மேலாளரை கண்டித்து நாமக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

நாமக்கல்லில் டாஸ்மாக் கிடங்கு மேலாளரைக் கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்
Updated On :27 ஜூலை 2020, 9:30 am

DIN

நாமக்கல்லில் டாஸ்மாக் கிடங்கு மேலாளரைக் கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வாணிபக் கழகம்(டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டத்திலுள்ள சுமார் 190 கடைகளுக்கு மது புட்டிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். லாரிகளில் மதுபானங்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றி,  இறக்குவதற்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராக பொறுப்பேற்ற குப்புசாமி என்பவர் தொழிலாளர்களிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும்,  லாரிகளில் சரக்கு எடுத்து வருபவர்கள் வழங்கும் இனாம் தொகையை தன்னிடம் வழங்குமாறு அவர் வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கிடங்கு மேலாளருக்கும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மீண்டும் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து டாஸ்மாக் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட மேலாளர் பண்டரிநாதன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பெருமாள்,  முனியப்பன் ஆகியோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.