விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக கே.எஸ். அழகிரி உள்பட 143 காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated On :28 ஜூலை 2020, 7:19 am

DIN

சென்னையில் தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக கே.எஸ். அழகிரி உள்பட 143 காங்கிரஸார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க முயற்சி நடப்பதாகக் கூறி, நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட சுமார் 140 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் கைதை கண்டித்து பல்வேறு நகரங்களில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

இதையடுத்து, தற்போது கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் உள்பட 143 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.