காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிக்கு சீல் வைப்பு
காஞ்சிபுரம் திருக்கச்சி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


காஞ்சிபுரம் திருக்கச்சி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதியில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்ததாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அந்த விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர்களை விசாரித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக நகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அந்த விடுதியை பூட்டி சீல் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...