ஒரு கட்சி என்று இருந்தால் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். நம்முடைய நாடு பலதரப்பு மக்களால் ஆனது. மத நம்பிக்கைகள் கொண்டவர்களும் இருக்கிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ள அவர், புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன். நமது ஜனநாயகத்திற்காக, நமது மக்களுக்காக, மாணவர்களுக்காக, ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக, நமது தேசத்திற்காக ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது. இப்போது நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது.