எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.70 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம், மற்றும் விழுப்பனூரில் ரூ 70 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
Updated On :1 ஜூன் 2020, 9:59 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம், மற்றும் விழுப்பனூரில் ரூ 70 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு ஊராட்சிக்குட்பட்ட முள்ளிக்குளம் மற்றும் விழுப்பனுர்  என இரண்டு கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களை நீண்டகாலமாக பராமரிக்காததன் காரணமாக கரைகள் வலுவிழந்தும், மதகுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. 

மேலும் இந்த கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்துக் கால்வாயில் முட்புதர்களும் சீமை கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே கால்வாயை தூர்வாரி கரைகளையும் மதகுகளையும் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்றுப் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு சார்பில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 70 லட்சம் மதிப்பில் இந்த கண்மாய்களை  சீரமைக்கும் பணி தொடங்கியது.நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கலந்துகொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் முகைதீன் ஆரீப்ரகுமான், நிலவள வங்கி தலைவர் முத்தையா மாவட்ட கவுன்சிலர்கள் கணேசன் வசந்தி மான்ராஜ், அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தைலாகுளம் மணிமுள்ளிக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் மணிமாலா, ஒப்பந்ததாரர்கள் சோதிமுனி முத்துக்குமார் மற்றும் திலகர்,தங்கமுத்து உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.