எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக அமைப்புச் செயலாளருக்கு ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2020, 12:47 pm

DIN


சென்னை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக அமைப்புச் செயலாளருக்கு ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆர்.எஸ். பாரதி ஆஜரானார்.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கருத்தரம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்,  ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜரானார். 

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, இன்று பிற்பகலில், ஆர்.எஸ். பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான ஒரு நபர் ஜாமீனிலும் ஆர்.எஸ். பாரதியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.