விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அருகே தளவாய் புரத்தை அடுத்த மாஞ்சோலை காலணியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). கட்டட தொழிலாளியான இவர் தனது தந்தை செல்லத்துரையுடன் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியேறிய இவர், இரவில் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இவரது உறவினர்கள் இவரைத் தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அம்மையப்பபுரம் செல்லும் சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அருகில் மது பாட்டில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இறந்த இசக்கி முத்துவின் கையில் தலை முடியும் வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் சண்டை நடந்ததற்கான அடையாளம் இருந்ததால், நண்பர்களுடன் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் தெரிவித்தனர்.
கை கலப்பு முற்றிய நிலையில், உடன் மது அருந்திய நண்பர்கள் இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய தளவாய்புரம் காவல்துறை கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இசக்கிமுத்துவுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


