ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை நிா்வாகம் தகவல்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த வாரம் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, அதற்கு அடுத்த இரு நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஜெ. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...