தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர் ஜி.காளன் மறைவு

ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.காளன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மதியம் காலமானார்.

News image
Updated On :11 ஜூன் 2020, 2:49 am

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.காளன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூன் 10) பிற்பகல் காலமானார். அவரது உடல் நாளை (ஜூன் 11) மாலை அம்பத்தூரில் தகனம் செய்யப்படுகிறது.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழக தலைவர் திரு ஜி.காளன் அவர்கள் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான இவர் பதினாறு ஆண்டுகள் தமிழக ஐ.என்.டி.யு.சி.யின் தலைவராக செயல்பட்டு தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் கொடுக்க தன்னையே அர்பணித்துக்கொண்டவர். அதற்காக பல போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை பெற்றுத் தந்தவர்.

அதேபோல, இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் உள்ள ஐ.என்.டி.யு.சி சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர். நிர்வாகத்தினரோடு சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்தவர். தொழிற்சங்க தலைவராக இருந்த அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

அவரது இழப்பு தமிழக ஐ.என்.டி.யு.சி.க்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தினருக்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் ஐ.என்.டி.யு.சி நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.