வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேட்டூர் காவிரி கரையோரத்தில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்

மேட்டூர்  காவிரி கரையோர பகுதிகளில் திடீரென டன் கணக்கில் மீன்கள் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

News image
Updated On :13 ஜூன் 2020, 12:10 pm

DIN

மேட்டூர்  காவிரி கரையோர பகுதிகளில் திடீரென டன் கணக்கில் மீன்கள் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 10,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இத்தண்ணீர் அணையையொட்டி உள்ள அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் ஏற்கெனவே காவிரியில் தேங்கி நிற்கும் நீருடன் கலந்து வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அணையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளான காவேரிகிராஸ் முதல் செக்கானூர் கதவை மின் நிலையம் வரை மீன்கள் திடீரென டன் கணக்கில் மயங்கிய நிலையில் கரையில் ஒதுக்குகின்றன. இதனைக் கரையோர மீனவர்கள் மற்றும் பொது மக்கள் அள்ளிச்செல்கின்றனர். 

எஞ்சிய மீன்கள் ஆங்காங்கே கரை ஒதுங்கிக் கிடக்கின்றன. கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் துர்வாடையால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.