கட்டுக்குள் அடங்காத கரோனா: நாள்தோறும் உயரும் பாதிப்பால் அச்சத்தில் சென்னைவாசிகள்

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 28,924-ஆக அதிகரித்துள்ளது.
கட்டுக்குள் அடங்காத கரோனா: நாள்தோறும் உயரும் பாதிப்பால் அச்சத்தில் சென்னைவாசிகள்


 
சென்னையில், வெள்ளிக்கிழமை, 1479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 28,924-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ம் தேதியில் இருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், சென்னை மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாள்தோறும் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என ஏறிக் கொண்டேச் செல்லும் எண்களும், உயரும் பலி எண்ணிக்கையும் வாழ்வாதாரங்களைத் தேடி வெளியே செல்லும் சென்னை மக்களின் மனதில் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிதீவிரமாக பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை, சென்னையில் 1,479 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 28,924-ஆக உயா்ந்துள்ளது. இதன்படி, 6 மண்டலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 3 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை, 294-ஆக உயா்ந்துள்ளது.

கோடம்பாக்கத்தில் பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது: இது தொடா்பாக சனிக்கிழமை காலை புள்ளி விவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் 4,821 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 3,781 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,464 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3,108 பேரும், அண்ணாநகா் 2,781 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 2,660 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,607 பேரும், வளசரவாக்கத்தில் 1,268 பேரும், திருவொற்றியூா் மண்டலத்தில் 1,072 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதே போல், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 14,723 போ் குணமடைந்துள்ளனா். 294 போ் உயிரிழந்துள்ளனா். 13,906 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com