டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரையில் கரோனாவிற்கு  இருவர் பலி

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர்  உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:48 pm

DIN

மதுரையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர்  உயிரிழந்துள்ளனர். 

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 88 வயது மூதாட்டி. இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவால் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், கரோனா அறிகுறி இருந்துள்ளது. 

அவருக்கு கரோனா பரிசோதனைச் செய்ததில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் அரசு கரோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு மூதாட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதியவர் பலி

முன்னதாக மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, கரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் ஜூன் 11ஆம் தேதி அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் தொற்று இருப்பதை மருத்துவர்கள் ஜூன் 12ஆம் தேதி உறுதி செய்தனர். முதியவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் நோய்களின் பாதிப்பு இருந்ததால், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.