திருப்பத்தூர், ஜோலார்பேட்டை காவலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இரு காவல்நிலையங்கள் மூடப்பட்டது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலையம் மூடப்பட்டது.
சென்னையிலிருந்து பணி மாறுதலாகி வந்த திருப்பத்தூர் கிராமிய உதவி காவல் ஆய்வாளருக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் 3 நாள்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த இரு காவல் நிலையங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதையடுத்து மூடப்பட்டன.