கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் நூதன போராட்டம்

தமிழகத்தில் கோயில்களை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி திருநெல்வேலியில் நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் நூதன போராட்டம்

தமிழகத்தில் கோயில்களை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி திருநெல்வேலியில் நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் சில தவறுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் கோயில்கள் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படவில்லை. 

கோயில்களைத் திறக்க வலியுறுத்தியும், உலக நன்மைக்காக வேண்டியும் இந்து தேசிய கட்சி சார்பில் திருநெல்வேலியில் மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் மணி தலைமையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் முன்பு புதன்கிழமை இன்று தேசிய கட்சியினர் திரண்டனர். 

கோயில் முன்பு தேங்காய் பழம் உடைத்துச் சிறப்பு வழிபாடு செய்த பின்பு தரையில் உணவைக் கொட்டி மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்பு கட்சியினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com