சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதால், ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதனால், சென்னை - செங்கல்பட்டு இடையேயான பரனூர் சுங்கச் சாவடியில் ஏராளமான வாகனங்கள் பல மணி நேரமாக சாலையில் நீண்ட வரிசையில் நிற்பதால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வந்தனர்.
நீண்ட நேரமாக வாகனங்கள் சாலையில் காத்து நிற்பதால், பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணத்தை ரத்து செய்து காவல்துறை எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.