செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,372 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 87 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,372 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...