பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,237ஐ எட்டியது!

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :19 ஜூன் 2020, 6:23 am

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி பூவிருந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாக பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,011 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 82 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,237 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.