நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 2 வாரத்தில் ரூ.65 வரை சரிந்துள்ளது. முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.30-ஆகவே நீடிக்கிறது.
கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் சரிந்து வந்த முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனை கடந்த மாதம் சற்று அதிகரித்தது. இதனால் ரூ.2 வரையில் விற்பனையான முட்டையானது அதன்பின் கிடுகிடுவென உயர்ந்து ரூ.4.60-ஐ எட்டியது. நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி பிற மண்டலங்களிலும் இந்த விலை உயர்வு காணப்பட்டது.
தற்போது கரோனாவின் வேகம் அதிகரித்துள்ளதாலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும் முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை சற்று குறைந்துள்ளது. நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யாததாலும், இங்கு பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30-ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிற மண்டலங்களின் முட்டை விலை விவரம் (காசுகளில்); ஹைதராபாத்-378, விஜயவாடா}390, பார்வாலா-359, ஹோஸ்பெட்-400, மைசூரு-440, சென்னை-450, மும்பை-438, பெங்களூரு-435, கொல்கத்தா-447, தில்லி-355.
கறிக்கோழி விலை இரண்டு வாரத்துக்கு முன் கடந்த 6-ஆம் தேதி ரூ.133-ஐ எட்டியது. அடுத்த ஓரிரு நாள்களில் விலை சரிவடைய தொடங்கியது. வியாழக்கிழமை ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது.
பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சென்னை பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு மேலும் ரூ.18-ஐ குறைத்து ரூ.68-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இரு வாரத்தில் மட்டும் ரூ.65 வரை விலை குறைந்துள்ளது. முட்டைக்கோழி விலை சரிந்தபோதும் சனிக்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்யப்படாமல் கிலோ ரூ.93-ஆக நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


