ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்ம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்ம் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 பேர்  வீரமரணம்  அடைந்தனர். தொடர்ந்து இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தன. இந்நிலையில், இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார். எதிர்கட்சித் தரப்பில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சிவசேனையின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தின் தொடக்கத்தில், லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் உயிர்நீதித்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். கரோனா போன்ற தேசிய பேரிடர் நேரத்தில் நாட்டை சிறப்பாக வழிநடத்தும் பிரதமருக்கு நன்றி. நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பைக் கூட விட்டுத் தர மாட்டோம். 

நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியரும் நாட்டை பாதுகாப்பார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.