வாழப்பாடி பகுதியில் சென்னை, மும்பையிலிருந்து திரும்பிய 6 பேருக்கு கரோனா
சென்னை, மும்பை பகுதியிலிருந்து வாழப்பாடி பகுதிக்குத் திரும்பியவர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று, இன்று சனிக்கிழமை உறுதியானது.


சென்னை, மும்பை பகுதியிலிருந்து வாழப்பாடி பகுதிக்குத் திரும்பியவர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று, இன்று சனிக்கிழமை உறுதியானது. இவர்களுடன் வந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா மும்பை உள்ளிட்ட பகுதியிலிருந்து, கடந்த இரு தினங்களில் வாழப்பாடிக்கு திரும்பியவர்கள் குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் தகவல் சேகரிக்கும் பேளூர் வட்டார சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர், அவர்களை பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதில், சென்னையிலிருந்து திரும்பிய போது ஆத்துார் தலைவாசல் நத்தக்கரை சிறப்பு முகாமில் நடத்திய பரிசோதனையில், 32 வயது பெண்ணிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வியாழக்கிழமை இவரது இரு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்களோடு, சென்னையிலிருந்து திரும்பிய அத்தனுார்பட்டியை சேர்ந்த 55 பெண்ணிற்கும், இன்று சனிக்கிழமை கரானோ தொற்று உறுதியானது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியிலிருந்து இரு தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பிய வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையத்தை 35 வயது பெண் ஒருவருக்கும், வாழப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
செங்கல்பட்டு பகுதியிலிருந்து வாழப்பாடி அடுத்த திருமனுாருக்கு வந்த 37 வயது இளைஞர் மற்றும் திருவள்ளூர் பகுதியில் இருந்து பழனிபுரம் கிராமத்திற்கு வந்த 36 வயது இளைஞர் ஒருவர், சந்திரபிள்ளை வலசு கிராமத்திற்குத் திரும்பிய 23 வயது இளைஞர் உட்பட மொத்தம் 6 பேருக்கு, இன்று சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, இவர்களோடு வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளவும், அறிகுறிகள் தென்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், பேளூர் வட்டார சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வாழப்பாடி பகுதியில் வெளியூர்களிலிருந்து வருவோருக்கு கரோனா தொற்று உறுதியாகி வருவதால், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிப்பதோடு, முககசவம் அணிந்து கொண்டு தற்காத்துக்கொள்ள வேண்டுமெனவும், பேளூர் வட்டார சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...