டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மயிலாடுதுறை துலாக்கட்டம் வந்தடைந்தது காவிரி நீர்

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு மதியம் வந்து சேர்ந்த காவிரி நீரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், நவதானியங்கள் வைத்து கும்ப மரியாதையுடன்  வரவேற்பு அளித்தனர்.

News image
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு வந்த காவிரி நீர்
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு மதியம் வந்து சேர்ந்த காவிரி நீரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், நவதானியங்கள் வைத்து கும்ப மரியாதையுடன்  வரவேற்பு அளித்தனர்.

மேட்டூரில் கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை காவிரிதுலாக் கட்டத்தை வந்தடைந்தது.

கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் துலாகட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் துலா கட்டத்தில் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும்.

Story image

இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி துலா கட்டத்திற்கு மேட்டூரில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று மதியம் வந்து சேர்ந்தது. பொங்கி வந்த காவிரி அன்னையை வரவேற்கும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவிரியில் இறங்கி பட்டாசு வெடித்தும், நவதானியங்கள் வைத்து பூரணகும்ப மரியாதையுடன் வழிபாடு செய்து உற்சாகத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதில் கிராமிய நாடக கலைஞர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, அகத்தியர், வள்ளுவர் மற்றும் காவிரித்தாய் வேடமணிந்து பங்கேற்றனர். ஏராளமானோர் பொங்கி வரும் காவிரி நீரை செல்போனில் படம் பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.