புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

ராயபுரம், தண்டையார்பேட்டையைத் தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. 

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2020, 5:50 am

DIN

ராயபுரம், தண்டையார்பேட்டையைத் தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது.  

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 42,752 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 623 பேர் உயிரிழந்துள்ளனர். 23,756 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. 

ராயபுரம், தண்டையார்பேட்டையைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. 

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,227 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5,110 பேரும், கோடம்பாக்கத்தில் 4,649 பேரும், அண்ணா நகரில் 4,585 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.