சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிறையில் தந்தை-மகன் மரணம்: உடல்களை மருத்துவக்குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் உடலையும் மருத்துவர்கள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Updated On :23 ஜூன் 2020, 12:12 pm

DIN

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் உடலையும் மருத்துவர்கள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை - மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இருவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸின் உடலை மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி புகழேந்தி, 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார் மேலும், பிரேத பரிசோதனை விடியோவாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.