தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

3 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: திருவள்ளூரில் இன்று 192 பேருக்குத் தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு

Updated On :25 ஜூன் 2020, 5:51 am

DIN

சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 192 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆவடியில், சோழவரம் உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 192 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,917 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 192 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,099 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.