தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோடு-சேலம் மாவட்டங்களுக்கு இடையே படகுப் போக்குவரத்து நிறுத்தம்

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

News image
நெரிஞ்சிப்பேட்டை படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் படகு
Updated On :25 ஜூன் 2020, 10:20 am

DIN

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது இதனால், இரு மாவட்டங்களுக்கும் இடையே நடைபெற்று வந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால், பொதுமக்களும் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளைத் தொடர்ந்து அறிவித்து வந்ததால், பயணிகள் படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக படகில் பயணித்து வந்தனர். 

இந்நிலையில், கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையிலான அனைத்து போக்குவரத்தையும் ரத்து செய்தது. மேலும், முறையாக இ-பாஸ் பெற்ற பின்னரே செல்ல வேண்டும் எனவும் அறிவித்தது.

இதையடுத்து, ஈரோடு மாவட்டத்துக்கும், சேலம்  மாவட்டத்துக்கும் இடையே நடைபெற்று வந்த படகு போக்குவரத்து வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.