வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரஜினி இரங்கல்: கராத்தே தியாகராஜன் தகவல்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தகவல் வெளியிட்டுள்ளார். 

News image
உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ்
Updated On :28 ஜூன் 2020, 10:08 am

DIN

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தகவல் வெளியிட்டுள்ளார். 

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோர் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு அரசிடம் முறையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.