குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
கடந்த 7 நாள்காக நடந்து வந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.


கடந்த 7 நாள்காக நடந்து வந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிடுமாறு சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்து குடிநீர் ஆலைகளை சோதனை செய்து மூடி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீல்வைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் எனவும் அதனை தமிழக அரசு 15 நாளில் பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து கடந்த 7 நாள்காக நடந்து வந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...