/

காலம்தான் பதில் சொல்லும்: ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ரஜினி பேட்டி

கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. 

News image
Updated On :5 மார்ச் 2020, 7:44 am

கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. 

சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் தலைமையில்  இன்று காலை 10 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இதில், 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டம் நிறைவடைந்த பின்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், 'ஓராண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களை சந்தித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். மாவட்டச் செயலாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றமாக இருந்தது. அது என்னவென்று பின்னர் கூறுகிறேன். மற்ற வகையில், இது ஒரு இனிமையான சந்திப்பு. 

நாட்டில், சகோதரத்துவம், அன்பு, அமைதி நிலவ வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப, நாட்டில் அமைதி நிலவ உறுதுணையாக இருப்பேன் என்று கூறினேன். சி.ஏ.ஏ. குறித்து ஆராய்ந்து பிரதமர் மோடி, அமித் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமிய அமைப்பிடம் கூறினேன்' என்றார். 

இறுதியாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.