மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூர் ஜைன கோயிலில் திருட்டு போன 22 சிலைகள் மீட்பு: 4 பேர் கைது

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன பழைமையான 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டு, 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :7 மார்ச் 2020, 1:49 pm

DIN

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன பழைமையான 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டு, 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் கரந்தை ஜெயின் தெருவில் ஸ்ரீஆதீஸ்வர சுவாமி என்கிற ஜைன கோயில் உள்ளது. இதில், தலா ஒன்றரை அடி உயர ஆதீஸ்வரர் சிலை, இருபத்தினான்காவது தீர்த்தங்கரர் சிலை, சரசுவதி சிலை, ஜோலமாலினி சிலை, சரவண யாக்சன் சிலை, தலா ஒரு அடி உயரமுடைய பஞ்சமேரு சிலை, மகாவீரர் சிலை, தலா அரை அடி உயர தார்நேத யாஸ்கன் சிலை, பத்மாவதி யாஃஷினி சிலை, நந்தீசுவரர் சிலை, தலா முக்கால் அடி உயர நவகிரக தீர்த்தங்கள் சிலை, நவதேவதை சிலை உள்ளிட்ட சிலைகளை மர்ம நபர்கள் ஜன. 19-ம் தேதி இரவு பின்புறக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து திருடிச் சென்றனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் கோயில் அறங்காவலர் அப்பாண்டைராஜன் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மேற்குக் காவல் நிலைய ஆய்வாளர் ஜி. செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் ஜி. சுகுமாறன் தலைமையில் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் நிகழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, மர்ம நபர்கள் சிலைகளைத் திருடி, வேனில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள சுங்கான்திடல் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சரவணன் என்கிற ராஜேஷ் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் மூலம் கரந்தையைச் சேர்ந்த பி. சண்முகராஜன் (45), சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்த பி. ரவி (45), நாகை மாவட்டம், கீழ்வேளூர் பிராதபுரத்தைச் சேர்ந்த வி. விஜயகோபால் (37) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், ராஜேஷ் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன.

திருட்டு போன 48 நாட்களுக்குள் இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.