தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்வு: அமைச்சர் தகவல்

டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
டாஸ்மாக்
Updated On :13 மார்ச் 2020, 11:59 am

DIN

டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான், தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

பின்னர், டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார். 

மேலும், இந்த ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ரூ.15.42 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.