சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் விருப்பம்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image
திமுக பொருளாளர் துரைமுருகன்
Updated On :16 மார்ச் 2020, 7:05 am

DIN


சென்னை: திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

16-3-2020 கடிதத்தின் வாயிலாக கழகப் பொருளாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன்.

எனவே, 29-3-2020 அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர்’ பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், திமுக பொதுச் செயலாளர் பதவி துரைமுருகனுக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், திமுக பொருளாளர் பதவிக்கு யார்? யார்? போட்டியிடுவார்கள் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.