டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று முதல் சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் இன்று காலை முதல் பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

News image
Updated On :17 மார்ச் 2020, 6:30 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் இன்று காலை முதல் பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயில் முகப்பில் உள்ள கேரளாந்தகன் வாயிலில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை அறிவதற்கான கையடக்கச் சோதனைக் கருவி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு சோதனை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இக்கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. 

காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் தொடர்புடைய பக்தர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்குமாறு அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்தது:

 தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மாவட்டத்துக்குள் வரும் அனைத்து மக்களுக்கும் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.