டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா வைரஸ் பரவல்: தமிழகத்தில் சிறைகளில் உள்ள  கைதிகளை சந்திக்க தடை

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 மார்ச் 2020, 4:25 am

DIN

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் திரையரங்குகள் மூடப்பட்டன. 

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை விதித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.